தமிழ் மொழியை பயில விரும்புகின்றீர்களா???

இணையத்தில் தாராளமாக புத்தகங்கள் உண்டு!
அதிலும் ஒரு சில புத்தகங்களே சிறப்பான வழிகாட்டியாக அமையும்.

அந்த வகையில் ஒரு புத்தகம் இது
 
 
Read more...

4G Phones பற்றிய நிறைந்த தகவல்களிற்கு - English website link




4G phones பற்றிய தொழினுப்ப செய்திகள், செயற்பாடுகள், அறிவுறுத்தல்கள், பயன்கள் என இந்தத் தளத்தில் அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள்!

அனைத்து தகவல்களையும் மொழி மாற்றம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன்.

நீங்களும் வாசித்து தெரிந்து கொள்ள உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் :)


இந்த Link மூலமாக 4G phones பற்றிய இணையத் தளத்திற்கு செல்லுங்கள்
Read more...

விண்வெளி துணுக்குகள்!!!

விண்வெளியின் புதிர்களை அறிவதில் மனித குலத்துக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வந்துள்ளது. சுமார் 1825 ஆண்டுகட்கு முன்பு "உண்மை வரலாறுகள் (True Histories)" என்ற தலைப்பில் லூசியான் என்ற கிரேக்க நையாண்டி எழுத்தாளர் ஒரு கற்பனை நூலை எழுதினார். அக்காலத்தில் நிலவி வந்த குற்றங்குறைகளின் அடிப்படையில் முழுக்க முழுக்கப் பொய்யும் கற்பனையும் கலந்த நூலாக அது விளங்கியது. கதிரவனுக்கும், நிலவுக்கும் சென்று பயணம் செய்யும் கற்பனைக் கதை அது.

அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில், விண்வெளி பற்றிக் குறிப்பிடத் தகுந்த நூல் எதுவும் வெளி வரவில்லை. இருப்பினும், நிலவைப் பற்றியும், விண்மீன்களைப் பற்றியும், அவற்றின் புதிர்களைப் பற்றியும் விளங்கிக் கொள்ள மக்கள் முயன்றே வந்துள்ளனர்.

நிக்கலஸ் கோபர்நிகஸ் என்ற போலந்து நாட்டு வானியல் வல்லுநர் தன்னுடைய ஆய்வுகளின் முடிவில், இந்த அண்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும், இப்புவி ஒரு கோள் என்றும் கூறினார். இத்தாலி நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ 1610-ல் ஒரு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன் வாயிலாக விண்வெளியையும், நிலவின் மேற்பரப்பையும் நெருக்கமாகப் பார்க்க முடிந்தது.

நிலவைப் பற்றியும், பிற கோள்களைப் பற்றியும் பல கண்டுபிடிப்புகளைக் கலிலியோ கண்டறிந்து வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்புகள் மக்களால் வரவேற்கப்படவில்லை. எனினும், ஒரு சில அறிஞர்கள் மட்டும் அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அப்போது முதலே விண்வெளிப் பயணம் பற்றிய முயற்சிகளில் அறிவியல் அறிஞர்கள் ஆர்வம் காட்டி வந்தனர் எனலாம்.

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார். முதலாவது வழியில், தெய்வீக சக்தி ஒன்று மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லக் கூடும். இரண்டாவது, ஆற்றல் மிக்க மிகப் பெரிய பறவைகள் துணையுடன் நிலவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்ததாக மிகப் பெரிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு மனிதனே நிலவிற்குப் பறந்து செல்லலாம். நான்காவதாக, பறக்கும் எந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்து, அதில் அமர்ந்து நிலவுக்குச் செல்லலாம். இவையே அவர் கூறிய 4 வழிகள்.
பின்னர் ஐசக் நியூட்டன் விண்வெளி பற்றிப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அவரது இயக்க விதிகள் (laws of motion) புதியதோர் அறிவியல் சிந்தனையை உலகிற்கு அளித்தது. புவியை விட்டு உயரே செல்லச் செல்ல, புவியின் ஈர்ப்பு விசை குறைந்து கொண்டே போகும் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும், விண்மீன்கள் முதற்கொண்டு சின்னஞ் சிறு துகள்கள் வரை அனைத்தும் ஒன்றை ஒன்று கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உடையவை என்றும், அக்கவர்ச்சி விசையே ஈர்ப்பு விசை எனவும் நிரூபித்தார்.

விண்வெளிப் பயணத்தில் நியூட்டனின் ஈர்ப்புவிசை விதிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்விதியின் அடிப்படையிலேயே, புவியின் கவர்ச்சி விசையிலிருந்து விண்வெளி ஓடத்தின் தப்பித்தல் திசை வேகம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், நியூட்டன் கண்டுபிடித்த மூன்று இயக்க விதிகளும் விண்வெளிப் பயணத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சுமார் 475 ஆண்டுகட்கு முன்பு வான்-ஹூ என்ற சீனர் நெருப்பு ஏவுகணை (fire rocket) ஒன்றைத் தயாரித்தார். நாற்காலி வடிவ ஊர்தி ஒன்றில் 47 ஏவுகணைகளில் வெடிப் பொருளை நிரப்பி அது உருவாக்கப்பட்டது. இதன் மீது அமர்ந்து கொண்டு விண்வெளியில் பறக்க இயலும் என அவர் நம்பினார். ஆனால் ஏவுகணைகளில் தீப்பற்றியவுடனே, அவர் உயரே தூக்கி எறியப்பட்டு, அதே வேகத்தில் தரையில் விழுந்து உயிர் இழந்தார்.

வான்-ஹூ அவர்களின் ஆய்வு தோல்வியில் முடிந்தாலும், அறிவியல் அறிஞர்கள் விண்வெளிப் பயணத்திற்குத் தகுதியான ஊர்தியைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. வில்லியம் காங்கிரேவ் என்ற இங்கிலாந்து நாட்டுப் போர்ப்படை அதிகாரி 1808ஆம் ஆண்டு துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிக்கத் துவங்கினார். இத்தகைய ஏவுகணைகள் கடற் சண்டையில் பெரும் வெற்றியை ஈட்டித்தரும் என்று அவர் நம்பினார். அவர் கண்டுபிடித்த இவ்வகை ஏவுகணைகள் 1812-ல் அமெரிக்காவுடன் நடந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டன.

ஏவுகணையைப் பயன்படுத்தி அண்டவெளியை ஆய்வு செய்வது பற்றிய நூல் ஒன்றை கான்ஸ்டான்லின் சிலோவ்ஸ்கி என்ற இரஷ்ய நாட்டு அறிஞர் 1898-ல் எழுதி வெளியிட்டார். விண்வெளிப் பயணத்திற்குப் புதியதோர் துவக்கமாக இந்நூல் விளங்கியது.

அமெரிக்க-ஜெர்மன் நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து திரவ எரிபொருளைப் பயன்படுத்திச் செலுத்தும் ஏவுகணைகளை 1920-ல் உருவாக்கினர். முன்பு சொல்லப்பட்ட இரஷ்ய விஞ்ஞானியும் திரவ எரிபொருளைப் பற்றிக் கூறி இருந்தார். ஆயினும் அப்போது அவர் கருத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை.ஏவுகணை வடிவமைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கோடர்ட் என்பவரும் முக்கிய பங்காற்றினார். அவரது முயற்சியால் துப்பாக்கி ரவையை ஏந்திச் செல்லும் ஏவுகணை உருவாக்கப்பட்டது. மேலும் திரவ எரிபொருளால் இயங்கும் ஏவுகணையிலும் அவர் ஆர்வம் காட்டினார். திட எரிபொருளை விட, திரவ எரிபொருள் அதிக ஆற்றல் வழங்குவதாக அவர் கண்டறிந்தார்.

கோடர்ட் பயன்படுத்திய திரவ எரிபொருளானது, பெட்ரோலில் இருந்து வடித்தெடுக்கப்பட்ட கேசொலின் (Gasoline) ஆகும். இந்த கேசொலினை எரிக்கத் திரவ உயிர்வளி (oxygen) பயன் படுத்தப்பட்டது. வளிம நிலையிலுள்ள உயிர்வளியானது அழுத்தத்தினால் குளிர்விக்கப்பெற்று திரவ நிலைக்கு மாற்றப்பட்டது. இதனை "லாக்ஸ் (lox)" எனக் கூறினர்.

திரவ எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட முதலாவது சோதனை ஏவுகணையை கோடர்ட் 1926-ல் செலுத்தினார். ஆனால் அந்த ஏவுகணை அதிக உயரம் செல்லவில்லை. எனினும் 1929-ல் மேலும் ஒரு ஏவுகணை அவரால் செலுத்தப்பட்டது. அது சுமார் 90 அடி உயரம் விண்ணில் சென்று, கட்டுப்பாடு குறைவு காரணமாகத் தரையில் விழுந்துவிட்டது. சுழலாழிக் கருவியைப் (gyroscope) பயன் படுத்தி இந்தப் பிரச்சினையையும் கோடர்ட் தீர்த்து வைத்தார். சுழலாழிக் கருவி என்பது விரைந்து சுழலும் ஒரு சக்கரம்; இச்சக்கரத்தின் அச்சு ஒரு குறிப்பிட்ட திசையில் எளிதாகத் திரும்பக் கூடியது.

கோடர்ட் செலுத்திய இறுதி ஏவுகணை, மணிக்கு 550 கி.மீ. வேகத்தில், விண்வெளியில் சுமார் 1.25 மைல் தூரம் சென்றது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களை மிகச் சிறிய இடத்திலிருந்து விண்ணுக்குச் செலுத்தக் கூடிய துணை உந்து கலங்களையும் கோடர்ட் வடிவமைத்தார். மேலும் அவர் வி-1, வி-2 என்ற ஏவுகணைகளைப் போரில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியில் உருவாக்கினார். இவற்றின் முன்னேறிய வடிவங்களே எதிர்காலத்தில் விண்வெளி ஓடங்களாக உருவெடுத்தன.

வார்னர் வான் பிரான் (Warner Von Braun) என்ற ஜெர்மன் நாட்டு ஏவுகணைப் பொறியாளர் இரண்டாம் உலகப் போரின் போது தமது நாட்டை விட்டு அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அவர் விண்வெளி ஆய்வுக் குழுவுக்குப் பொறுப்பேற்றார். அவர் தலைமையில்தான் எக்ஸ்ப்ளோரர்-1 என்ற துணைக்கோள் (Satellite) வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. அடுத்து அவரது மேற்பார்வையில் சாட்டர்ன் (Saturn) ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. முதல் முறையாக புவியிலிருந்து நிலவிற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இதுவே பின்னர் பயன்படுத்தப்பட்டது. சிறு வயது முதலே வெர்னர் பிரான் விண்வெளியின் வியத்தகுக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தார். அவரது தாயாரும் சிறு தொலைநோக்கி ஒன்றை மகனுக்கு அளித்து அவரது ஆர்வத்துக்கு ஊக்கம் அளித்தார். பின்னாளில் வெர்னர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக வளர்ந்தார்.

சோவியத் யூனியன் 1957 அக்டோபர் 4ஆம் நாள் ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைத் துணைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலகம் முழுதும் இச்செயலை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தது எனலாம். இச்செயற்கைத் துணைக்கோள் சிறியதொரு நிலவை ஒத்திருந்ததோடு, புவியை 90 நிமிடங்களில் சுற்றி வந்தது. புவியிலிருந்து பல நூறு மைல்களுக்கு அப்பால் இந்தச் செயற்கைத் துணைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்து 1958 ஜனவரி 31-ல் அமெரிக்கா எக்ஸ்ப்ளோரர்-1 என்ற தனது துணைக்கோளை விண்வெளியில் செலுத்தியது. அடுத்து வந்த சில ஆண்டுகளில் சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மாறி மாறி துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தின. விண்வெளிக் கண்டுபிடிப்புகள் பலவற்றில் ஈடுபட்டு நிலவுக்குச் செல்லும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டன.

சோவியத் யூனியன் ஸ்புட்னிக்-1ஐத் தொடர்ந்து மற்றொரு விண்வெளிக்கலமான ஸ்புட்னிக்-II-ஐச் செலுத்தியது. அதில் லைகா என்ற பெயர் கொண்ட பெண் நாய் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு வாரம், பல இன்னல்கள் நிறைந்த விண்வெளிச் சூழ்நிலையில் அந்த நாய் இருந்து உயிர் வாழ்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனவே விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதலாவது உயிரினம் என்ற பெருமை லைகா என்ற அந்தப் பெண் நாய்க்குக் கிடைத்தது.

விண்வெளிப் பயணத்தின் திருப்பு முனையாக, 1969 ஜூலையில், மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்ததைக் குறிப்பிடலாம். அமெரிக்கா அனுப்பிய விண்வெளிக்கலமான அப்பலோ-II, நெயில் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் இ ஆல்ட்வின் ஆகிய இரு விண்வெளிப் பயணிகளுடன் 1969 ஜூலை 20-ல் நிலவில் சென்று இறங்கியது.

பின்னர் பல துணைக்கோள்கள் பல்வேறு நாடுகளால் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய தகவல்களை ஒளிப்படங்களாக அனுப்பி வைத்தன. அப்படங்களின் அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளின் வரை படங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் வானொலி, தொலைக்காட்சி ஆகிய தகவல் தொடர்பு அமைப்புகளில் துணைக்கோள் தொழில்நுட்பம் பெரும் மாற்றங்களை விளைவித்தது. முக்கியமாக நான்கு வகையான துணைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை 1) கூர்ந்து நோக்கித் தகவல் திரட்டும் துணைக் கோள்கள், 2) தட்பவெப்பம் அறிவிக்கும் துணைக்கோள்கள், 3) தகவல் தொடர்புத் துணைக்கோள்கள், 4) பிறகோள்கள், விண்மீன்கள் பற்றிய தகவல்களைத் தந்து வழிகாட்டும் துணைக்கோள்கள் என்பனவாம்

புவியில் உள்ள பல இடங்களைப் பற்றிய சரியான தகவல்களையும், படங்களையும் அனுப்பி இதுவரை புரியாத புதிராக இருந்த பலவற்றிற்கு முதல் வகைத் துணைக்கோள்கள் விடையளித்தன. புவியிலுள்ள காடுகள், மலைகள், எரிமலைகள், கனிம வளங்கள், பனிப்பகுதிகள் ஆகியன பற்றிய பல விவரங்களை இவ்வகைத் துணைக்கோள்கள் அனுப்பி வைத்தன.

தட்பவெப்பத் துணைக்கோள்கள் அனுப்பும் தகவல்கள் வாயிலாகப் புயல், நிலநடுக்கம், பெருமழை, சூறாவளி பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிய முடிவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிகிறது.

அடுத்த வகைத் துணைக்கோள்களால் தகவல் தொடர்பு அமைப்பில் பெரும் புரட்சியே விளைந்துள்ளது. ஒரே ஒரு துணைக்கோளின் வாயிலாக பல ஆயிரம் தொலை பேசிகளைச் செயற்படுத்த முடிகிறது. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உலகின் எந்த மூலையிலும் ஒலி/ஒளி பரப்பச் செய்ய முடியும். அடுத்து, சில சிறப்பு வகைத் துணைக்கோள்களைப் பயன்படுத்திப் பிற கோள்களின் விவரங்களைப் பெற இயலும்.
Read more...

அறிவில் துணுக்கு - இயந்திரம்

ராட்சஸ வேகத்தில் வளர்ந்து வரும் இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிரிகளாகி விடும் என்று பயப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

இதை ஒரு உதாரணம் மூலமாக அவர்கள் தெளிவாக விளக்குகின்றனர். இன்று கம்ப்யூட்டர் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் புகுந்து விட்டது. கம்ப்யூட்டர் அனைத்தும் உலகில் ஒரு நாள் வேலை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். மனித வாழ்க்கையே உலகில் ஸ்தம்பித்து விடும். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு இது போல கம்ப்யூட்டர் உலகெங்கும் வேலை செய்யவில்லை என்றாலும் மனித வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது. ஒரு சில விஞ்ஞானிகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பர்.
ஆக இன்று நம்மை கம்ப்யூட்டர் ஆதிக்கம் செல்லும் நிலைக்கு வந்து விட்டோம். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்துமே கம்ப்யூட்டர் தரும் தகவல்களின் அடிப்படையில் தான் என்று ஆகி விட்டது!

இனிமேல் நடக்கப்போவது என்னவெனில் இந்த இயந்திரங்களை நம் உடலுக்குள்ளேயே நாம் செலுத்திக் கொள்ளப் போகிறோம், அவ்வளவு தான்!

இது வரை, மனித உடல் வேறு, இயந்திரங்கள் வேறு என்று தனித் தனியே இருந்தது. இனி அப்படி இருக்காது. மனிதனும் இயந்திரமும் சங்கமமாகி விட்ட நிலையில் மனிதன் - இயந்திரம் ஒன்றாகவே ஆகி விடும்!

இந்த இயந்திரங்களே மூளையில் நமது சிந்தனா செல்களைத் தூண்டி விட்டு தக்க முடிவுகளை எடுக்கத் தூண்டும்!

இந்த மனிதன்-இயந்திரம் நாகரிகம் நம்மாலேயே உருவாக்கப்படுவதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸாவில் அமிஸ் ரிஸர்ச் சென்டர் (Ames Research Centre) என்று ஒரு ஆய்வு மையம் உள்ளது. இதில் பிரபல ஆராய்ச்சியாளரின் பெயர் சக் ஜோர்கென்ஸன்.(Chuck Jorgensen) ஜோர்கென்ஸனும் அவரது சகாக்களும் அற்புதமான ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனித குரல்வளையில் உள்ள வோகல் கார்ட் எனப்படும் குரல் நாணில் உள்ள நரம்பு செல்களில் உருவாக்கப்படும் சிக்னல்களைப் பிடித்து அதை அப்படியே கம்ப்யூட்டரில் பேச்சாக ஒலிக்கச் செய்யும் முயற்சியே இவர்களது ஆராய்ச்சி!

பேச முடியாதவர்களுக்கு இது பெரிதும் துணை செய்யும். அவர்கள் பேச நினைத்ததை கம்ப்யூட்டர் தனது ஸ்பீக்கர் வாயிலாக ஒலிக்கச் செய்து விடும்.

அது மட்டுமின்றி விண்வெளியில் ஸ்பேஸ் சூட்டுடன் உள்ளவர்களுக்கும், மிக மிக அதிகமான இரைச்சல் உள்ள இடங்களில் பேச வேண்டியவர்களுக்கும் இது நல்ல பயனைத் தரும்.

மூளை தரும் சிக்னல்கள் மனித குரல்வளையில் உள்ள குரல் நாண்களை என்ன பேச வேண்டுமோ அதைப் பேச இயக்குகின்றன. இந்த சிக்னல்களை கம்ப்யூட்டர்கள் தெரிந்து கொள்ளும், பேசும், அவ்வளவு தான்!

இந்த விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?

மனம் மனதோடு தொடர்பு கொண்டு பேசும் டெக்கில்பதி என்பது தான்! இதுவும் எதிர்காலத்தில் சாத்தியமே என்று ஜோர்கென்ஸன் கூறுகிறார்.

மனித பிரக்ஞையைக் கடந்து தொலைதூரத்தில் உள்ளவர்களோடு மனிதன் பேச முடியும் என்பது ஆச்சரியமான செய்தி! இப்படி ஒரு விஷயத்தை காலம் காலமாக மனித குலம் கனவு கண்டு வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட மனம் மனதோடு தொடர்பு கொள்ளும் நாள் வரும்போது மனித நாகரிகமே முற்றிலுமாக மாறி விடும்!
Read more...

ரோபோ - எந்திரன் வரலாறு - அறிவியல் துணுக்கு

“ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.

கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், காலம் காலமாக மனிதர்கள் ரோபோக்களை உருவாக்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அல் சசாரி என்றவர் நிறைய “ஆட்டோமேட்டான்”களை வடிவமைத்திருக்கிறார். தானாகவே இயங்கக்கூடிய எந்தக் கருவியையும் ஆட்டொமேட்டான் என்ன்று கூறலாம்.

சரி.. ரோபோட்டுகளுக்கும் இவைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஆட்டொமேட்டான்களுக்கு பேட்டரி தேவையில்லை, அவைகள் சின்னச் சின்ன மெக்கானிகல் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அலிபாபாவின் குகையை (அடியில் அடிமைகள் இல்லையென்று வைத்துக்கொள்வோம்!) யாரேனும் தொட்டவுடன் அது திறந்துகொண்டால் எப்படியிருக்கும்? அதுதான் ஆட்டொமேட்டான். மின்சார்ந்த ஆட்டொமேட்டான்களை இன்று ரோபோ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம்.

ரோபோ என்றால் என்னவென்ன்று கேட்டதற்கு ஜோசஃப் எங்கெல்பர்கர் சொல்கிறார், “ரோபோ என்றால் என்னவென்ற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது. ஆனால், ஒரு ரோபோவை நான் பார்த்தால், இது ஒரு ரோபோ என்று அடையாளம் கண்டுகொள்ளத் தெரியும்!”

அவர் சொல்வது சரியே. விதவிதமான வேலைகளைச் செய்வதற்காக ரோபோக்களைப் பிரயோகிப்பதால், அவையனைத்தையும் ஒரு சொல்லில் விளக்குவது சிரமமாகிறது.

மனிதனை ஒத்த உருவத்துடன்ன் இருந்தால்தான் அதற்குப் பெயர் ரோபோ என்பது தவறு. தொழிற்சாலைகளில் நிறைய ரோபோக்களைக் காண முடியும். கார் தயாரிக்கும் இடங்களில் பெரிய பெரிய கைகள் (கைகள் மட்டுமே!) உடைய ரோபோக்களைப் பார்க்கலாம் (“மைனாரிடி ரிபோர்ட்” திரைப்படம் பார்க்க!).

ஐரோபோ என்றொரு கம்பெனி வீடுகளை சுத்தம் செய்வதற்கு “ரூம்பா” என்றொரு ரோபோவைத் தயாரித்து விற்று வருகிறது. அதன் விலை, கிட்டத்தட்ட பதினாறாயிரம் ரூபாய். யுத்தங்களில் வேவு பார்ப்பதற்கும், சுடுவதற்கும்கூட ரோபோக்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நூறு ரோபோக்களில் நாற்பது ஜப்பானில் தான் தயாராகின்றன. மனிதர்களை உரித்து வைத்தாற்போல ரோபோக்களைத் தயாரிக்கிறார்கள். மிட்சுபிஷி என்றொரு பிரபல கம்பெனி, “இனி மனிதர்களும் ரோபோக்களும் ஒருவரோடு ஒருவர் ஒன்று வாழும் காலம் பக்கம்தான்!” என்று சொல்கிறது.
Read more...

சுருக்கெழுத்துப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு

பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர். Stenography என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். 'Steno' என்றால் குறுகிய (அ) சுருக்கிய, 'graphy' என்றால் எழுதுதல் என்பது பொருளாகும்.

சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற ரோமானிய தத்துவ அறிஞர்களின் "Tenets and Lectures" என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ஆம் நூற்றாண்டில்தான் சிறப்புடன் வளர்ச்சியுற்றது.

சர் ஐசக் பிட்மன் என்னும் ஆங்கில எழுத்தாளர் 1837ஆம் ஆண்டில் தற்போது பழக்கத்தில் உள்ள புதிய வகைச் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன.

ஜான் ராபர்ட் கிரெக் என்பவர் 1888ஆம் ஆண்டு இந்த முறையை மேம்படுத்தினார். முதலில் இச்சுருக்கெழுத்து முறை ஆங்கில மொழிக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது; காலப் போக்கில் இம்முறை பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நன்றி - இணையம்.
Read more...

இணைய உலாவி பற்றி...

ஆட்-ஆ‎ன்ஸ் என்றால் எ‎ன்ன?

வீடு கட்டுகிறோம்; பார்த்துப் பார்த்து அடிப்படைத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு கட்டி முடிக்கிறோம். பி‎ன்னர், சிறிது காலம் கழித்து ஒரு நாய் வாங்கினால் அதற்கெ‎ன்று சிறு வீடு போ‎ன்ற மரத்தினாலான அமைப்பை ஏற்படுத்த எண்ணுகிறோம். அல்லது, வாட்ச்மே‎னி‎ன் தேவை ஏற்பட்டு அவருக்கெ‎ன்று ஒரு ஷெல்டர் கட்ட வேண்டியதாகிறது. அல்லது, நமக்கு வரும் தபால்களை வாங்கும் பொருட்டு கேட்டில் ஒரு சிறு தபால் பொட்டியைப் பொருத்தி விடும் அவசியம் ஏற்படுகிறது. இது போன்ற, பி‎ன் தேவைகளுக்காக, அவை சம்பந்தமான வேலைகளைத் துரிதப்படுத்துவதற்காக சில ஏற்பாடுகளைச் செய்கிறோம் அல்லவா.. அதே போ‎ன்ற விஷயம்தா‎ன் Add-ons. இவை குறிப்பிட்ட பணியைச் செய்ய விழையும் சிறு / குறு கணி‎னி புரோகிராம்கள். Browser வழங்காத கூடுதல் வசதிகளை இவை தருகின்ற‎ன.

பி‎ன்வருவன அவற்றில் சில வகைகள்:

Extensions
Themes
Dictionaries
Search bar
Plugins

இவற்றை உருவாக்குபவர் யார்?

Add-ons developers எ‎ன்று கூறப்படும் தனி மனிதரிலிருந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை‏ இந்த சேவையைச் செய்கின்றனர். பெரும்பாலும், இந்த add-ons ‏ இலவசமாகவே கிடைக்கின்றன. நிலாச்சாரலுக்காக த‎ன்னார்வலர்களாக வந்து வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் அ‎‎ன்புள்ளங்களைப் போ‎ன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினி ஆர்வலர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்தப் பணிகளைச் செய்கி‎ன்றனர்.

எல்லா browserகளும் இந்த add-onஸை சப்போர்ட் செய்கி‎ன்ற‎னவா?

ஆம்! ஏறக்குறைய அனைத்து browserகளும் சப்போர்ட் செய்கி‎ன்றன. பிரபலமாக விளங்கும் சில உலாவிகள் :

1. Internet Explorer
2. Firefox
3. Opera
4. Netscape Navigator
5. Thunderbird
6. Sunbird

உபயோகங்கள்

இவை தரும் வசதிகள் கணக்கிலடங்கா. Firefox, Thunderbird, Sunbird போ‎ன்ற உலாவிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும் Mozilla நிறுவனம் ஏறத்தாழ 7000 ஆட்-ஆ‎ன்ஸ்களை தனது தளத்தில் போட்டு வைத்திருக்கிறதாம்! உலகம் முழுவதிலுமிருந்து இதுவரை கிட்டத்தட்ட 1000 மில்லிய‎ன் தடவைகள் ‏இந்த ஆட்-ஆன்ஸ் டவு‎ன்லோட் செய்யப்பட்டிருக்கி‎ன்றனவாம்!

சில உபயோகமான ஆட்-ஆ‎ன்ஸ் :

நெருப்பு நரி (firefox) எனக்குப் பிடித்த உலாவி எ‎ன்பதால் அது தொடர்பான ஆட்-ஆன்ஸ் பற்றிய சில விவரங்கள் இங்கே.

ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து எளிதாக ஆடியோ/வீடியோக்களை இறக்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7447

FTP மூலம் ஃபைல் டிரா‎ன்ஸ்பர் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/684

ஜிமெயிலில் மேம்பட்ட வசதிகளைப் பெற..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8257

செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1191

ஜிமெயிலில் மெயில் வந்தால் உடனடியாக தெரியப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/173

அடிக்கடி செல்லும் தளங்களை புக்மார்க் செய்து கொள்ள..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2410

உலகக் கடிகாரங்களி‎ல் நேரம் பார்க்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1117

எதை வேண்டுமானாலும் டவு‎ன்லோட் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/201

ஏ‎ன் ஆட்-ஆன்ஸுக்கு இவ்வளவு முக்கியத்துவம்?

உலாவியிலேயே பல வேலைகளை முடித்து‏ விடுவதெ‎ன்பதுதான் இதன் தனித்துவம். வேறெந்த தனிப்பட்ட சாஃப்ட்வேர்களும் தேவையில்லை. தனிப்பட்ட சாஃப்ட்வேர்களில் கூடுதல் வசதிகள் இ‏ருந்த போதிலும், ஆட்-ஆன்ஸ் தருவது அடிப்படையில் போதுமான, எளிமையான பய‎ன்பாடுகள் (sleek and simple). நினைவகத்தையும் அதிகம் சாப்பிடாது எ‎ன்பது குறிப்பிடத்தக்கது.

உபயோகப்படுத்திப் பாருங்கள்; பய‎ன் பெறுங்கள்
Read more...

3G Mobile phones பற்றி கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்க!

கம்ப்யூட்டரின் வளர்ச்சியை பல்வேறு தலைமுறைகளாகப் பிரித்தது போல, தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளையும் அவ்வாறு பிரிக்க முடியும். குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது, ஒரே ஒரு தொலைத் தொடர்பு அம்சம் மட்டுமே - வயர்லெஸ் டெலிஃபோன் - பயனாளர் பாஷையில் ‘செல்ஃபோன்’.



உங்கள் செல்ஃபோன் வேலை செய்வது எப்படி? செல்ஃபோன், உங்கள் அருகாமையில் உள்ள “கம்யூனிகேஷன் டவர்” உடன் தொடர்பு கொண்ட பிறகு, அந்த “டவர்” உங்களை உலக நெட்வொர்க்கில் இணைத்து விடுகின்றது. டவரின் உயரத்துக்கேற்ப அது தொடர்பு ஏற்படுத்தக் கூடிய பரப்பளவு அதிகரிக்கும் . சிறு வயதில், டி.வி.யின் ஆண்டெனாவை தந்தை வீட்டின் மொட்டை மாடியில் வைத்து, டி.வி. தெரிகின்றதா என்று பார்க்கச் சொல்வாரே, அது போலத்தான்! அத்தனை டவர்களையும் ஒரு “நெட்வொர்க்” இணைத்து வைக்கின்றது. அப்படி இணைக்கும் நெட்வொர்க்குகளைப் பற்றித்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றோம்.

GSM மற்றும் CDMA என இரு தொழில்நுட்பங்கள் செல்ஃபோனில் உண்டு. ரிலையன்ஸ், டாட்டா இண்டிகாம் போன்ற நிறுவனங்கள் CDMA வசதியைத் தருகின்றன. இதர நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக, ஏர்டெல், வொடாஃபோன் போன்றவை GSM உபயோகப்படுத்துகின்றனர். இவை இரண்டுமே 2G நெட்வொர்க்கின் வகைகள்.



ஓ! அப்படியென்றால் 2G என்ற ஒன்றும் உண்டா! ஆம், இத்தனை நாட்களாக நாம் (ஏன், இன்னும் கூடப் பெரும்பாலானவர்கள்) உபயோகிப்பது 2G நெட்வொர்க்குகளைத்தான். அதற்கு முன்னால், 1Gயும் உண்டு. இரண்டாம் உலகப்போரின் சமயம், ரேடியோ ஃபோன்களின் மூலம் பேசிக் கொண்டார்களே, அது 0G நெட்வொர்க் ஆகும். “தொலைதூரம்” என்று சொல்ல முடியாவிட்டாலும், அதுவும் வயர்லெஸ்தானே!

1G நெட்வொர்க்குகளின் மூலம்தான் முதன் முதலில் உலகில் இருக்கும் அனைத்து செல்ஃபோன்களையும் இணைக்க முடிந்தது. இது நடந்தது கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால். இந்த நெட்வொர்க்குகள் உபயோகித்தது அனலாக் சிக்னல்களை. (அனலாக் என்றால் - நேரத்துடன் தொடர்ச்சியாக மாறும் சிக்னல்கள்). 1991ல் முதன் முறையாக அனலாகுக்கு டாட்டா சொல்லிவிட்டு, டிஜிடலினுள் செல்ஃபோன் குதித்தது. டிஜிடல் என்றால்? தொடர்ச்சியாக மாறாமல், விட்டு விட்டு மாறும் சிக்னல்கள். இதற்கு மேல் விளக்கம் தேவை என்றால், உங்களுக்குத் தெரிந்த எலக்ட்ரிகல்/எலெக்ட்ரானிக்ஸ் பயிலும் மாணவர்களை (ஏன், ப்ளஸ்-டூ மாணவர்கள் கூடப் போதும்!) கேளுங்கள், அழகாக படம் வரைந்து விளக்கம் தருவார்கள்.

அது சரி, இந்த 2Gயால் என்ன லாபம்? கண்கூடாகத் தெரியவில்லையா - அதன் பிறகுதான் பாமரனும் செல்ஃபோன் உபயோகிக்க ஆரம்பித்தான். ஸ்டோரேஜ் என்று சொல்லப்படும் “செய்திகளைச் சேர்த்து வைத்தல்” மிகவும் சுலபமானது. (ஒரே அலைவரிசையில் இன்னும் நிறைய கால்களை அனுமதிக்க முடியும்!)

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது 3G வந்திருக்கின்றது! புதிதாக என்ன சாதித்திருக்கின்றார்கள்? 2Gயில் என்ன குறை கண்டார்கள்?!

முன்பெல்லாம் செல்ஃபோன்களைப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தோம். GSM போன்ற 2G நெட்வொர்க்குகளுக்கு இது சர்வ சாதாரணம். அவைகளின் முக்கிய வேலையும் அதுதான். அவ்வப்பொழுது, இணையதள வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்துக்கும், அதன் வேகத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. (“இல்லையே, என் ஃபோன் வேகமா இருக்கே” என்று நீங்கள் சொன்னால், பதில் இதுதான் “சின்னச் சின்ன இணையப் பக்கங்களை நீங்கள் பார்ப்பதால்தான். ஒரு நூறு எம்.பி ஃபைலை தரவிறக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் ஃபோன் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்!)

அது மட்டும் இல்லை, இணைய வசதிகளை 2G தருவதற்கு, நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். காரில் பறந்து கொண்டே இணையத்தின் மூலம் சினிமா பார்க்க முடியாது. ஏன், ஒரு பக்கத்தைத் தரவிறக்குவதே கடினம்தான். ரயில்களில் செல்லும்பொழுது செல்ஃபோன் வேலை செய்யாமல் படுத்துமல்லவா, அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!

போதாத குறைக்கு, இப்பொழுது காலம் மாறிவிட்டது, செல்ஃபோன் பேசுவதற்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. நமக்கு செல்ஃபோனிலேயே எல்லாம் வேண்டும். என் மொத்தப் பாடல் தொகுப்பு, பத்துப் பதினைந்து திரைப்படங்கள், ஈ-மெயில், இணையம், எல்லாமும் செல்ஃபோனிலேயே வேண்டும். 2Gயால் இது முடியாது - அதனால்தான் வந்தது 3G.

3G அனைத்துக்கும் பதில் வைத்திருக்கின்றது. சரி, என் போன்ற பொறியாளர்களுக்காக சில கணக்குகள் - 2G தரும் வேகம் கிட்டத்தட்ட பத்து கிலோபைட், ஒரு வினாடிக்கு. அந்த வேகம் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே. நாம் நகர்ந்து கொண்டே இருந்தோமானால் இதுவும் வராது. 3G எவ்வளவு தருகின்றது? கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோபைட்ஸ், ஒரு நொடிக்கு - ஒரே இடத்தில் இருந்தால்! அதி வேகத்தில் பறந்துகொண்டே 3G நெட்வொர்க்கை நோண்டினால், கிட்டத்தட்ட நொடிக்கு முன்னூறு கிலோபைட்ஸ்!!

இனி ட்ரெய்னில் போய்க்கொண்டே, செல்ஃபோனைக் கையில் வைத்த படி உலகைக் கை வசப்படுத்த முடியும். “லேட் ஆகி விட்டது” என்று அவசரக் கடிதம் எழுதலாம். செல்ஃபோன் பில் மட்டும் அல்லாது, எல்லா பில்களையும் உள்ளங்கையிலேயே கட்டி விடலாம். பேங் அக்கவுண்ட்களைப் பராமரிக்கலாம். ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது தொலைந்து போனால், கூகில் மேப்ஸ் உதவியுடன் எங்கிருக்கின்றோம் என அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஏன், சினிமா பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், கதை படிக்கலாம், அரட்டை அடிக்கலாம் (வீடியோ உடன் கூடிய அரட்டை) - எல்லாம் உள்ளங்கையிலேயே!

ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன் இருந்த செல்ஃபோன் நெட்வொர்க்களையும், ப்ராட்பேண்ட் தர இணையதள நெட்வொர்க்குகளையும் 3G ஒன்றாக இணைத்துவிட்டது.


- Kajan Subash :)
Read more...

Cable TV பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமே!!!

தொலைக்காட்சி 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த, முக்கியமானதோர் ஒளிபரப்புச் சாதனமாகும். ஒளிபரப்பப்படும் படங்களை அலை வாங்கிகள் (antennas) மூலம், வானலைகளிடமிருந்து பெற்று காட்சிப் பெட்டியின் திரையில் ஒளிபரப்புவதே இதன் செயலாகும்.






தொலைக்காட்சிக் கண்டுபிடிப்புக்குப் பின்னர் நிகழ்ச்சிகள் எல்லாப் பகுதிகளிலும் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. இருப்பினும், குன்றுகள், மலைகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள் ஆகிய பகுதிகளில் வானலைகள் தடங்கலின்றி செல்வது கடினமாக இருந்ததால் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பில் தடை உண்டாயிற்று. எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலம் இத்தகு தடங்கலைக் கொண்ட பகுதியாகும். இங்கு தொலைக்காட்சி நல்ல வகையில் ஒளிபரப்பாவதற்கு வசதியான முறையைக் கண்டறிவதற்கான கட்டாயம் ஏற்பட்டது; இதன் விளைவாக உருவானதே கேபிள் தொலைக்காட்சியாகும்.

விண்வெளியிலிருந்து வானலைகளைத் திரட்டுவதோடு மட்டுமல்லாமல் கேபிள்கள் (கம்பிகள்) வாயிலாக, அவற்றை வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்புச் செய்வதற்கும் இச்சாதனம் பயன்படுகிறது. இது "சமுதாய அலைவாங்கித் தொலைக்காட்சி (Community Antenna T.V.--CAT)" என அழைக்கப்பட்டது. ஆற்றல் வாய்ந்த அலைவாங்கிகளில் கேபிள்களை இணைத்து மிகுதியான பரப்பளவில் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.

ஜான் வால்சன் மற்றும் ஜெரோம் பார்சன் எனும் இரு அமெரிக்கர்கள் 1948ஆம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள அல்டோரியா ஓரிகன் நகரத்தின் மிக உயர்ந்த கட்டடத்தின் மேலே, திறன் வாய்ந்த அலைவாங்கி ஒன்றை நிறுவினர். சுமார் 120 கி.மீ. தூரத்தில் உள்ள சீடல் தொலைக்காட்சி மையத்திலிருந்து நிகழ்ச்சிகளின் வானலைகள் இந்த அலைவாங்கியினால் பெறப்பட்டன. இந்த அலைவாங்கியில் இணைக்கப்பட்ட கேபிள்கள் வாயிலாக அந்நிகழ்ச்சிகள் நகரத்தின் பல வீடுகளிலும் ஒளிபரப்பாயின. இத்திட்டத்தின் வெற்றிக்குப் பின்னர் அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் இத்தொழில் நுட்பம் பரவியது. இன்று அமெரிக்காவில் ஏறக்குறைய 10,000 கேபிள் தொலைக்காட்சி அமைப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ஆம் ஆண்டு முதன் முதலாக தில்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கியது. சுமார் 15 ஆண்டுகள் கழித்து கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பும் துவங்கியது.

தொடக்கத்தில் 5 மெகா ஹெர்ட்ஸ் கூடுதல் அலைவரிசையில் தொலைக்காட்சி சமிக்கைகளை ஒளிபரப்பும் திறன் கொண்ட பல இரட்டைவடக் கேபிள்கள் (கம்பிகள்) பயன்படுத்தப்பட்டன. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெருமளவுக்கு நேரடியாகவே ஒளிபரப்பப் படுகின்றன. மேலும் ஒரே கேபிள் அமைப்பைக் கொண்டு பல தடங்களின் (சேனல்களின்) நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இதன் காரணமாக கல்வி, விளையாட்டு, வானிலை, அரசியல், பொழுதுபோக்கு, பங்குச் சந்தை, செய்திகள் என எல்லாத் துறைகளும் சார்ந்த பல்வேறு தொலைக்காட்சி ஒளிபரப்புகளை வீட்டிலிருந்தே காண்கிறோம்.
Read more...

Laptop வாங்கப் போறீங்களா??? இதையும் பாத்துட்டுப் போங்க. :)

எடை:

தாங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால் எடை குறைந்த அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். எடை குறையக்குறைய விலை அதிகமாகும். ஒருவேளை எடை அதிகமான லேப்டாப்பை வாங்கி இருந்தால் அதை வீட்டிலே வைத்துவிட்டுச் செல்லவும்.

வெப்பம்:


தாங்கள் வாங்க நினைக்கும் மடிக்கணினி எவ்வளவு வெப்பம் உமிழும் என நன்கு தெரிந்துகொண்டு வாங்கவும்.
விலை மலிவு என, சரியான கட்டமைப்பு இல்லாத மடிக்கணினி வாங்குவது தங்களின் தொடைக்கு தோசைக்கல் வாங்குவது போன்றது.
நினைவகம்:
பல நிறுவனங்கள் குறைந்தது 2 ஜிபி நினைவகம் உள்ள மடிக்கனினிகளை வெளியிடுகின்றன. ஆனால் அவை 4ஜிபி யாக எதிர்காலத்தில் உயர்த்திக்கொள்ளும் வசதி படைத்தததா என விசாரித்து வாங்கவும்.
மின்கலம்:

இயன்றால் 9-ஸெல் மின்கலம் வாங்க முயற்சிக்கவும். தங்களின் கணினிப் பயன்பாடு அதிகம் என்றாள் 2 மின்கலங்களை வாங்கவும். நெடும் பயணத்தின் போது அவை பெரிதும் பயன்படும்.
ஆயுள்:
ஒரு லேப்டாப் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் சிறப்பாக உழைக்கும். ஆனால் எந்தக் கம்பெனியும் ஒரு வருடத்திற்கு மேல் உத்திரவாதம் தருவது இல்லை.
சேவை மையம்:
பல லேப்டாப் விற்கும் விற்பணையாளர்கள் சர்வீசிங் செய்து தருவது இல்லை. அங்கீகாரம் பெற்ற சேவை மையம் எங்கு உள்ளது என விசாரித்து தெரிந்து கொள்ளவும்.
விலை: 20000 ரூபாய் முதல் லேப்டாப் கிடைக்கிறது. ஆனால் நினைவிருக்கட்டும், லேப்டாப் ஐப் பொருத்தவரை விலை குறையக்குறைய தரம் மற்றும் வேகம் (பிராசசர்) குறைவாக இருக்கும்.

அளவு:


பெரிய திரை இருப்பது தான் பெருமை என நினைத்து பலர் கங்காரு போல் பெரிய லேப்டாப்பை மடியில் சுமந்து இருக்கிறார்கள்.லேப்டாப் அளவு சிறியதாக இருக்கும்போது எடுத்துச்செல்வது எளிதாகிரது.
ஒவ்வொரு நிறுவனமும் 4 வகை தயாரிப்புகளை வெளியீடு செய்கின்றன.
வகை 1 : 20000 முதல் 30000 வரை.
அம்சங்கள்: விலை குறைவு, குறைந்த தரக்  கட்டமைப்பு மற்றும் வேகம்.
யாருக்கு உகந்தது: மின்னஞ்சல், இன்டர்நெட், ஆஃபீஸ் மட்டுமே பயன்படுத்துவோர் அல்லது  லேப்டாப் என்று ஒன்று இருந்தால் போதும் என நினைப்போர்.

வகை 2:  30000 முதல் 45000 வரை.

முதுகலை மாணவர், அலுவலக மென்பொருள் பயன்படுத்துவோர், காலேஜ் ப்ராஜெக்ட்ஸ் செய்வோர். சற்று கணினி அதிகமாகப் பயன்படுத்தும் எவரும் வாங்கலாம்.

வகை 3: 45000 முதல் 60000 வரை.

Graphics Designers, Gamers, System Admins, Real Mobility Wanted Users.
வகை 4: 60000 முதல் 130000 வரை.
அப்பாவிடம் அதிக பணம் உள்ளோர்.

தொழில்நுட்ப அம்சங்கள்:
1. Dual Core or Quad Core  Processor
2. 2GB DDR2 RAM is Minimum
3. 160GB or 250GB HDD
4. Bluetooth
5. WiFi
6. Memory Card Reader Slot
7. Webcam
8. DVD RW Drive

மேற்கண்ட அனைத்தும் அவசியமாக இருக்கவேண்டும். முகம், கைரெகை பார்க்கும் லேப்டாப் பெருமை அடித்துக்கொள்ள உதவுமே அன்றி மிகவும் இன்றியமையாத் தேவை அல்ல.

lol : புதிதாக லேப்டாப் பயன்படுத்தும் முன் வலது ஆள்காட்டி விரலில் தேங்காய் எண்ணை தேய்த்துப் பயன்படுத்தவும்.
Read more...

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Priority Inbox!!!

கூகுள் Gmail-ன் புதிய வசதியினை மேம்படுத்தியுள்ளது. நமக்கு வரும் email-ஐ நமக்கு உப யோகமான மற்றும் தேவையற்ற Email-கள் என பிரிக்கப்படுகிறது. இது நாம் வாசிக்கும் Email மற்றும் பதில் அனுப்பும் Email -களுக்கு தகுந்தார் போல் செயல்படுகிறது.இதனால் நாம் வாசிக்காத தேவையற்ற Email-கள் குறைவான மதிப்பு கொடுக்கப்பட்டு நமது கவனத்தில் இருந்து சற்றே தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அடிக்கடி Reply செய்த மற்றும் வாசித்த Email-களுக்கு அதிக கவனம் கொடுத்து முன்னிலை படுத்தப்படுகிறது. Gmail-ன் சக்திவாய்ந்த SPAM FILTERS நமக்கு வரும் தேவையற்ற Email -ஐ தனியே பிரித்து விடுகிறது.


g


1st Issue - B. Kajan Subash.
Read more...